மியன்மாரில் வெள்ளத்தில் மூழ்கிய 85 கிராமங்கள்

மியன்மாரில் அணை உடைந்தால் 85 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளது.
மியன்மார்,
மத்திய மியன்மார் பகுதியில் உள்ள ஸ்வர் சாங் என்ற அணையின் ஒரு பகுதி உடைந்து ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் 85 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. மேலும் 63,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வீட்டில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர் ஆகியோர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 2 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர்ப்பாசனத்துக்காக கட்டப்பட்ட இந்த அணை பராமரிப்பின்றி காணப்பட்டதாக கூறப்படுகிறது. அதிக அளவில் நீரை சேமித்து வைத்திருந்ததனால் அணை உடைந்தற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story






