உலக செய்திகள்

அமெரிக்காவில் வங்கி கட்டிடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி + "||" + Cincinnati bank building shooting leaves 3 dead, 2 injured; suspect dead, police say

அமெரிக்காவில் வங்கி கட்டிடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

அமெரிக்காவில் வங்கி கட்டிடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
அமெரிக்காவில் வங்கி கட்டிடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். #USBankShoot
சிகாகோ, 

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் சின்சினாட்டி நகரில் உள்ள ஒரு வங்கி கட்டிடத்தில் நேற்று துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. 30 மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்துக்குள் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9 மணி அளவில் புகுந்த ஒரு மர்ம நபர் திடீரென்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 3 பேர் குண்டு பாய்ந்து பலி ஆனார்கள். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த மர்ம நபரை சுட்டுக் கொன்றனர்.

துப்பாக்கியால் சுட்ட நபர் யார்? அவர் எதற்காக சுட்டார்? என்பது பற்றி உடனடியாக தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.