உலக செய்திகள்

பாகிஸ்தானின் 13வது ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி நாளை பதவியேற்பு + "||" + Dr Arif Alvi to take oath as 13th Pakistan President on Sep 9

பாகிஸ்தானின் 13வது ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி நாளை பதவியேற்பு

பாகிஸ்தானின் 13வது ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி நாளை பதவியேற்பு
பாகிஸ்தானின் 13வது ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி நாளை பதவியேற்கிறார்.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்தவர் ஆரிப் ஆல்வி (வயது 69).  இவர் தந்தையை போன்று பல் மருத்துவராக உள்ளார்.  இவரது தந்தை டாக்டர் ஹபீப் உர் ரகுமான் இலாஹி ஆல்வி ஆவார். தேச பிரிவினைக்கு முன் இவர், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பல் மருத்துவராக விளங்கினார். அப்போது அவருக்கு நேரு எழுதிய கடிதங்களை குடும்பத்தினர் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.

டாக்டர் ஹபீப் உர் ரகுமான் இலாஹி ஆல்வி, பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று அழைக்கப்படுகிற முகமது அலி ஜின்னா குடும்பத்துக்கும் நெருக்கமானவர் என தகவல்கள் கூறுகின்றன.

ஆரிப் ஆல்வியின் முழுப்பெயர் டாக்டர் ஆரிப் உர் ரகுமான் ஆல்வி ஆகும். இவர் கராச்சியில் பிறந்தவர் ஆவார்.

பாகிஸ்தான் அதிபராக உள்ள மம்னூன் உசைனின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் 13வது ஜனாதிபதியாக ஆல்வி பதவியேற்கிறார்.  பிரதமர் இம்ரான் கான் மற்றும் ராணுவ தலைமை தளபதி குவாமர் ஜாவித் பாஜ்வா, அரசியல் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய நண்பரான ஆல்வி, கட்சியின் பொது செயலாளராக கடந்த 2006ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை பதவி வகித்து வந்துள்ளார்.  அவர் கடந்த ஜூலை 25ந்தேதி நடந்த பொது தேர்தலில் என்.ஏ.-247 (கராச்சி) தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பதவியேற்பு
ராணிப்பேட்டையின் உதவி கலெக்டராக இளம்பகவத் பொறுப்பேற்றுக்கொண்டார்.
2. தமிழக மேசை பந்து விளையாட்டு வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது வழங்கினார் ஜனாதிபதி
தமிழக மேசை பந்து விளையாட்டு வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.
3. வெளிநாட்டுக்கு தப்பும் பொருளாதார குற்றவாளிகளை தடுக்கும் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்
இந்தியாவில் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி செல்வோரை தடுக்கும் வகையிலான மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து உள்ளார்.
4. ராம்நாந் கோவிந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஜனாதிபதியாக பதவி ஏற்று ஒராண்டு நிறைவு பெற்றதையொட்டி ராம்நாந் கோவிந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
5. ஜனாதிபதி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் டி.டி.வி.தினகரன் பேட்டி
பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையை நிராகரித்த ஜனாதிபதி தனது முடிவை மறுபரிசீலனை செய்து அவர்களை விடுதலை செய்தால் நல்ல முடிவாக இருக்கும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.