உலக செய்திகள்

குழந்தை பெற்று கொள்ள மறுத்த 27 வயது மனைவியை விவாகரத்து செய்யும் 87 வயது நடிகர் + "||" + The child refused to receive it 27 year old wife Will deal with it 87-year-old actor

குழந்தை பெற்று கொள்ள மறுத்த 27 வயது மனைவியை விவாகரத்து செய்யும் 87 வயது நடிகர்

குழந்தை பெற்று கொள்ள மறுத்த 27 வயது மனைவியை விவாகரத்து செய்யும் 87 வயது நடிகர்
ரஷ்யாவில் 87 வயதுடைய நடிகர் 27 வயது மனைவி குழந்தை பெற்று கொள்ள மறுத்ததால், அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நடிகர் இவன் க்ராஸ்கோ (87). கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடாலியா க்ராஸ்கோ  (27) என்ற பெண்ணை தன்னுடைய 84 வயதில் திருமணம் செய்து கொண்டார். அப்போது அந்த பெண்ணிற்கு 24 வயது. தன்னை விட 60 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், அப்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் இவர் நடாலியாவை விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நடாலியா  அவருடன் உறவு வைத்து கொள்ள மறுப்பதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து இவன் க்ராஸ்கோ  கூறுகையில், அவள் உறவு வைத்து கொண்டால், குழந்தை பிறக்கும் எனவும், பிறக்கும் குழந்தையை பார்த்து கொள்வதற்கு போதிய அளவு பணம் இல்லை, சொந்த வீடு இல்லை போன்ற காரணங்களால் பயப்படுகிறாரோ என்ற எண்ணம் எனக்கு தோன்றுகிறது.

நடாலியாவுடன் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் தற்போது அது இல்லை. விவாகரத்து செய்வதே நல்லது என்று முடிவெடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இவன் க்ராஸ்கோ ஏற்கனவே 3 திருமணம் செய்துள்ளதால் அவருக்கு 3 மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். 5 வருடங்களுக்கு முன்னர் தான் இவர் தாத்தா ஆனார். மேலும் 27 வயதான நடாலியா  ஒரு ஏழ்மை குடும்பத்தில் பிறந்து வாழ்ந்து வந்ததால், தன்னுடைய குழந்தைகளுக்கும் அது போன்ற சூழ்நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காக இப்படி இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல போதை மருந்து கடத்தல் மன்னனின் காதல் கதை: 100 பாதுகாப்பு வீரர்களுடன் சென்று காதலை தெரிவித்தார்
மெக்சிகோ நாட்டின் பிரபல போதை மருந்து கடத்தல் மன்னனான எல் சாப்போ தமது காதல் மனைவியிடம் முதன்முதலில் காதலை வெளிப்படுத்தியது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
2. மனைவியின் துரோகத்தை விருந்து வைத்து அனைவரின் முன்னும் வெளிப்படுத்திய கணவன்
வெனிசுலா நாட்டில் மனைவி தனக்கு செய்யும் துரோகத்தை வெளிப்படுத்துவதற்காக, கணவர் மிகப்பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் வினோத சம்பவம் நடந்துள்ளது.
3. தாயின் கருப்பையில் இருந்து குழந்தையை எடுத்து சிகிச்சை அளித்து மீண்டும் கருப்பையில் வைத்த டாக்டர்கள்
இங்கிலாந்தில் அறுவை சிகிச்சைக்காக குழந்தையை கருப்பையிலிருந்து வெளியில் எடுத்த மருத்துவர்கள், சிகிச்சை முடிந்ததும் மீண்டும் உள்ளே வைத்து தைத்துள்ள ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.
4. சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 152 பாதிரியார்கள் நீக்கம்
சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 152 பாதிரியார்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
5. இளமையாக தோன்ற சொந்த ரத்தத்தினாலான கிரீமை பயன்படுத்தும் பிரபல மாடல் அழகி
இங்கிலாந்தை சேர்ந்த பிரபலம் விக்டோரியா பெக்காம் தனது சொந்த ரத்தத்தினாலான கிரீமை பயன்படுத்துகிறார் என்ற செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.