உலக செய்திகள்

உலகைச் சுற்றி... + "||" + Around the world ...

உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...
* பாகிஸ்தான் ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவி ஏற்றுக் கொள்கிறார்.
* சீன நிதி மந்திரி வாங் யி, 3 நாள் பயணமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்று உள்ளார். அவர் பாகிஸ்தான் நிதி மந்திரி ஷா மக்மூத் குரேஷியை சந்தித்து பேசினார். சீன பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் பேச்சு நடத்தினர்.

* ஆப்கானிஸ்தானில் காபூல்– காந்தஹார் நெடுஞ்சாலையில் பஸ்சும், வேனும் மோதி விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 15 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

* ஈராக் நாட்டின் பஸ்ரா விமான நிலையத்தை குறிவைத்து நேற்று 3 ராக்கெட்டுகள் வீசப்பட்டன. இதில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

* பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கான மானியங்களை நிறுத்தி விட விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி சலசலப்பை ஏற்படுத்தி  உள்ளார்.