உலக செய்திகள்

உலகைச் சுற்றி... + "||" + Around the world ...

உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...
* ஜப்பானில் 26 ஆண்டுகளில் முதன்முதலாக இப்போது ஒருவரை பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
* ஜெர்மனியில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான கூட்டணி ஆட்சியின் செல்வாக்கு இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்து உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவு கூறுகிறது. இந்த கூட்டணி ஆட்சியை 29 சதவீதத்தினரே ஆதரிக்கின்றனர்.

* இந்தியாவில் உள்ள சீக்கியர்கள், பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு விசா இன்றி வந்து வழிபடுவதற்கு வசதியாக கர்தார்பூர் எல்லையை திறந்து விடுவது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

* எதிரிகளை பயமுறுத்துகிற விதத்தில் ஈரான் ராணுவ வீரர்கள் தங்கள் பலத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டின் மூத்த தலைவர் அயோத்துல்லா காமேனி அறிவுறுத்தி உள்ளார்.

* இந்தியாவின் புனே நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்க உள்ள ‘பிம்ஸ்டெக்’ உறுப்பு நாடுகளின் ராணுவ பயிற்சியில் இருந்து நேபாளம் விலகிக்கொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.