உலக செய்திகள்

தெற்கு சூடானில் ஏரியில் விமானம் விழுந்து விபத்து: 17 பேர் பலி + "||" + The plane crashed into a lake in South Sudan 17 killed

தெற்கு சூடானில் ஏரியில் விமானம் விழுந்து விபத்து: 17 பேர் பலி

தெற்கு சூடானில் ஏரியில் விமானம் விழுந்து விபத்து: 17 பேர் பலி
தெற்கு சூடான் நாட்டின் தலைநகர் ஜூபா. அங்கு உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஒரு சிறிய ரக விமானம், பயணிகளை ஏற்றிக் கொண்டு, யிரோல் நகருக்கு நேற்று புறப்பட்டு சென்றது.
ஜூபா,
 
விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

அந்த விமானம் அங்கு  உள்ள ஒரு ஏரியில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக பின்னர் தெரிய வந்தது.

இந்த விபத்தில் 17 பயணிகள் பலியாகி விட்டனர். அவர்களது உடல்கள், ஏரியில் இருந்து மீட்கப்பட்டு விட்டன.


 6 வயது குழந்தை உள்பட 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அங்கு இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஐரோப்பியரான ஒருவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிளுடன் விழுந்த மெக்கானிக் பலி மாடுகுறுக்கே பாய்ந்ததால் விபரீதம்
மணமேல்குடி அருகே மாடுகுறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த மெக்கானிக் பலியானார்.
2. கர்நாடகத்தில் நின்ற லாரி மீது சுற்றுலா பஸ் மோதல் : மும்பையை சேர்ந்த 6 பேர் நசுங்கி சாவு
கர்நாடகத்தில் லாரி மீது சுற்றுலா பஸ் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் காயம் அடைந்தனர்.
3. திருவாரூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
திருவாரூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.
4. கணவர் மது பழக்கத்தை கைவிட தீக்குளித்த பெண் படுகாயம்-குழந்தை பலி
கணவரின் மது பழக்கத்தை கைவிடக்கோரி தீக்குளித்த பெண் படுகாயம் அடைந்தார். இதில் ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
5. செய்யாறு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி தூசியில் மின்னல் தாக்கி 3 பெண்கள் மயக்கம்
செய்யாறு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பரிதாபமாக இறந்தாள். தூசியில் மின்னல் தாக்கி 3 பெண்கள் மயக்கம் அடைந்தனர்.