உலக செய்திகள்

ஓட்டலில் முஸ்லீம் பெண்ணுடன் வீடியோ எடுத்த இளைஞர் கைது + "||" + Hotal Take a video with a Muslim girl Youth arrested

ஓட்டலில் முஸ்லீம் பெண்ணுடன் வீடியோ எடுத்த இளைஞர் கைது

ஓட்டலில் முஸ்லீம் பெண்ணுடன் வீடியோ எடுத்த இளைஞர் கைது
சவுதி அரேபியாவில் உள்ள ஓட்டலில் முஸ்லீம் பெண்ணுடன் வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலக அளவில்  சவுதி அரேபியா எண்ணெய் ஏற்றுமதி, பொருளாதாரம் என வளர்ச்சியடைந்து காணப்பட்டாலும், இன்னும் பெண்களுக்கு எதிரான கெடுபிடியான சட்டங்களை கடைப்பிடித்து வருகிறது.இது தங்களுடைய மரபு என்றும் அதனை மீறினால் நிச்சயமாக கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் எகிப்திய இளைஞர் ஒருவர் முஸ்லீம் பெண்ணுடன் காலை உணவருந்திவிட்டு, வீடியோ எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையவாசிகளால் அதிகளவு பகிரப்பட்டதை அடுத்து, சவுதி அரேபியா தொழிலாளர் அமைச்சகம் எகிப்திய மனிதரை கைது செய்ததுடன், விசாரணைக்காக ஓட்டல் உரிமையாளரையும் அழைத்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய தொழிலாளர் அமைச்சகம், முஸ்லீம் பெண்களை பணியமர்த்துவதற்கான விதிமுறைகளை மீறியதால் உரிமையாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகவும், சவுதி விதிமுறைகளை மீறியதால் தான் எகிப்திய இளைஞர் கைது செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா - சவுதி இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முன்னிலையில் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா குறித்த 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
2. தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவை நமது பொதுவான கவலைகளாகும்- சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்
தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவை நமது பொதுவான கவலைகளாகும் என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கூறி உள்ளார்.
3. சவுதி அரேபியா இளவரசர் டெல்லி வருகை -பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு
டெல்லி விமான நிலையத்தில் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை, பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றார்.
4. சவுதி அரேபியா சிறையில் இருக்கும் 2,000 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை - சவுதி அரேபியா இளவரசர் உத்தரவு
சவுதி அரேபியாவில் சிறையில் இருக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி அரேபியா இளவரசர் உத்தரவிட்டுள்ளார்.
5. பாகிஸ்தான் நெருக்கமான நாடு; உறவு தொடரும் - சவுதி அறிவிப்பு
சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் நெருக்கமான நாடு என்றும், பாகிஸ்தானுடன் உறவு தொடரும் என்றும் சவுதி இளவரசர் அறிவித்துள்ளார்.