உலக செய்திகள்

குழந்தை பாலியல் வழக்கில் 50 வருட சிறைத்தண்டனையில் இருந்து காப்பாற்றிய நாய் + "||" + Child sex case The dog who saved from 50 years imprisonment

குழந்தை பாலியல் வழக்கில் 50 வருட சிறைத்தண்டனையில் இருந்து காப்பாற்றிய நாய்

குழந்தை பாலியல் வழக்கில் 50 வருட சிறைத்தண்டனையில் இருந்து  காப்பாற்றிய நாய்
அமெரிக்காவின் ஓரிகானை சேர்ந்த ஒருவருக்கு வழக்கொன்றில் விதிக்கப்பட இருந்த 50 வருட சிறைத்தண்டனை அவர் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட நாய் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது.
வாஷிங்டன்

குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் சார்ந்த வழக்கில் 42 வயதான ஜோஸுவா ஹார்னெர் என்பவர் மீதான குற்றச்சாட்டு கடந்த 2017ஆம் ஆண்டு உண்மை என்பதாக நிரூபிக்கப்பட்டது. 

இந்த நிலையில்  இந்த வழக்கை ஆய்வு செய்த 'ஓரிகான் இன்னொசென்ஸ் ப்ராஜெக்ட்' என்னும் குழுவை சேர்ந்தோர் அந்த நாய் வேறொரு வீட்டில் இருந்ததை கண்டறிந்தனர். 

"லூசி என்றழைக்கப்பட்ட அந்த நாய் சுடப்படவில்லை. லூசி உயிருடன் நல்ல நிலையில் இருக்கிறது" என்று மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தின் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"எங்களது விசாரணை அதிகாரியும், ஓரிகான் இன்னொசென்ஸ் ப்ரொஜெக்ட்டை சேர்ந்த விசாரணை அதிகாரியும் சேர்ந்து லூசி என்ற அந்த நாயை கண்டறிந்ததோடு, அதன் அடையாளத்தை உறுதிசெய்து, நேரம் செலவிட்டதுடன், அதோடு புகைப்படமும் எடுத்தோம்."

மேற்குறிப்பிட்ட வாதங்களை கேட்ட ஓரிகான் மாநிலத்தின் மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு மாதம் ஹார்னெரை விடுதலை செய்ததுடன், மறுவிசாரணைக்கும் உத்தரவிட்டது.

இந்த வழக்கிலிருந்து தான் விடுவிக்கப்படுவதற்கு காரணமான அனைவருக்கும் நன்றியை உரிதாக்கிக்கொள்வதாகவும், இனி தானும் தனது மனைவியும் சேர்ந்து இயல்பான வாழ்க்கையை வாழவுள்ளதாகவும் ஹார்னெர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் குற்றம் நிருபிக்கபட்டு இருந்தால் ஹார்னெருக்கு 50 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு இருக்கும்.