உலக செய்திகள்

அமெரிக்கா: டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியருக்கு முக்கிய பதவி + "||" + America: Trump key position in the administration of Indian

அமெரிக்கா: டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியருக்கு முக்கிய பதவி

அமெரிக்கா: டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியருக்கு முக்கிய பதவி
அமெரிக்க நாட்டில் டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பீமல் பட்டேல் என்பவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டு உள்ளது. ஜார்ஜியாவை சேர்ந்த இவர் நிதி நிறுவனங்களுக்கான கருவூல துணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நியமனத்தை ஜனாதிபதி டிரம்ப் செய்து உள்ளார்.


தற்போது இவர், நிதி ஸ்திரத்தன்மை மேற்பார்வை கவுன்சிலுக்கான கருவூல துணை செயலாளராக உள்ளார்.

அமெரிக்க அரசின் கருவூலத்துறையில் சேர்வதற்கு முன்பாக இவர் மத்திய டெபாசிட் காப்பீட்டு நிறுவன இயக்குனர் ஜெரேமியா ஓ நார்டனின் மூத்த ஆலோசகராக பணியாற்றினார்.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார். இவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்திலும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்திலும் படித்து உள்ளார்.