சோகம் நிரம்பி வழியும் குட்டித் தீவு நாடு!


சோகம் நிரம்பி வழியும் குட்டித் தீவு நாடு!
x
தினத்தந்தி 15 Sep 2018 9:48 AM GMT (Updated: 15 Sep 2018 9:48 AM GMT)

அழகிய குட்டித் தீவு நாடான நவ்ருவில், சோகம் நிரம்பி வழிகிறது.

முந்தைய காலத்தில் இது இங்கிலாந்து ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தது. இந்நாட்டைப் பார்வையிட்ட முதல் ஐரோப்பிய பயணி, இதை ‘இனிமையான நாடு’ என்று வர்ணித்தார். அப்படித்தான் நவ்ரு அழைக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்நாடெங்கும் துயர்மிகு கதைகளே நிறைந்திருக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சட்டவிரோதமாக நுழைய முயலும் அகதிகள், நவ்ருவில் ஆஸ்திரேலிய அரசால் நடத்தப்படும் தடுப்புக் காவல் முகாம்களில்தான் அடைக்கப்படுகிறார்கள்.

பசிபிக் பெருங்கடலில் வடகிழக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து 3 ஆயிரம் கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இத்தீவு நாட்டின் மக்கள்தொகை பத்தாயிரம் தான்.

ஆஸ்திரேலிய அரசின் தடுப்புக் காவல் முகாம்கள்தான் இந்தக் குட்டி நாட்டுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. வருவாய் வழியாகவும் இருக்கின்றன.

நவ்ருவில் உள்ள பாஸ்பேட் சுரங்கங்கள் மற்றொரு வருவாய் ஆதாரமாக உள்ளன. ஆனால் இன்னும் முப்பது ஆண்டுகளில் அதுவும் தீர்ந்து போய்விடும் என கணிக்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற நாடுகளின் உதவியைத்தான் நவ்ரு நம்பி இருக்கிறது.

இந்நிலையில், இந்த நாட்டில் உள்ள தடுப்பு முகாம்களில் அகதிகள் சந்தித்துவரும் பிரச்சினை சர்வதேச அளவில் விவாதப் பொருளாகி உள்ளது.

இங்கு தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர்களுக்குக்கூட தற்கொலை எண்ணம் அதிகமாக எழுவதாகக் கூறுகிறார்கள் இந்த முகாம்களில் உள்ளவர்களும், உளவியலாளர்களும்.

இந்த முகாமில் உள்ளவர்களுடன் செயல்பட்டுவரும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை பேராசிரியர் நடாஷா பிளச்சர், ‘இந்த முகாம்களில் உள்ள எட்டு வயது, பத்து வயது சிறுவர் களிடம்கூட தற்கொலை நடத் தையைப் பார்க்கிறோம்’ என்கிறார்.

இந்த மக்களின் நலனுக் காக ஆஸ்திரேலி யாவில் மக்கள் போராடி வருகின்றனர், உரத்துக் குரல் எழுப்பி வருகின்றனர்.

நடாஷா மட்டுமல்ல, முகாம்களில் உள்ள மக்களைக் கவனித்துவரும் பலரும் இதையே சொல்கி றார்கள். அவர்களின் வாழ் க்கை முற்றிலும் சிதைந்து இருக்கிறது. இந்த முகாம்களில் இருந்த பலர் இறந்துவிட்டனர். தற்போது இங்குள்ளவர்களின் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்பதை நினைத்தாலே அச்சமாக உள்ளது என்கின்றனர்.



முகாம்களில் உள்ளவர்களின் பாதுகாப்புக் கருதி அவர்கள் குறித்த தனிப்பட்ட தகவலைப் பகிர மறுக்கும் பிளச்சர், பதினைந்து வயதுடைய குழந்தைகள் தொடர்ந்து தற்கொலைக்கு முயற்சித்து வருவதாகவும், தங்களைத் தாங்களே வருத்திக்கொள்வதாகவும் கூறுகிறார். இந்தப் பிரச்சினை உச்சத்தில் உள்ளதாகவும் அவர் சொல்கிறார்.

இந்த விஷயத்தில் கவனம் செலுத்திவரும் மனித உரிமை கூட்டுக் குழு ஒன்று, ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்த முகாமில் உள்ள 110 குழந்தைகளை வேறு எங்காவது குடியேற்றம் செய்யவேண்டும் என்று கூறி உள்ளது.

நவ்ருவில் உள்ள இந்த தடுப்பு முகாம்களில் மருத்துவ வசதிகள் இருந்தாலும், அவை போதுமான அளவில் இல்லை என்கிறார்கள்.

யாருக்காவது உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டால், நவ்ரு அரசாங்கத்தின் கவனத்துக்கு அதை எடுத்துச் சென்று வெளிநாடுகளுக்கு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்.

மோசமான உடல்நிலைப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் தைவான், பப்புவா நியூகினியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறுகிறது. இந்தத் தீவில் உள்ள முகாம்களில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காக பல பணிகளைச் செய்துவரும் ஜெனிபர் கன்ஸ், அந்தக் குழந்தைகள் ஆஸ்திரேலிய பகுதியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய கடமை ஆஸ்திரேலியாவுக்கு இருக்கிறது என்கிறார்.

சொந்த நாட்டில் வாழ வழியற்று ஓடிவரும் அகதிகளை அனைவருமே அன்போடு அணுக வேண்டும்! 

Next Story