உலக செய்திகள்

13 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த செருப்பு! + "||" + Shoes found after 13 years

13 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த செருப்பு!

13 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த செருப்பு!
பதிமூன்று ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த ஒரு ‘புகழ்பெற்ற’ செருப்பு தற்போது கிடைத்திருக்கிறது.
‘தி விசார்டு ஆப் ஓசெட்’ படத்தில் ஜூடி கார்லாண்ட் என்ற நடிகை அணிந்த மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட செருப்பாகும் அது.

மின்னசோட்டா அருங்காட்சியகத்தில் இருந்த இந்த ஒரு ஜோடி செருப்பை, கடந்த 2005-ம் ஆண்டு சிலர் ஜன்னல்களை உடைத்துத் திருடிச் சென்றனர். இந்தச் செருப்பு குறித்து தகவல் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு தருவதாக ஒருவர் அறிவித்து இருந்தார்.


இந்நிலையில் தற்போது இச்செருப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, சம்பந்தப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஆசிரியரின் தேர்வுகள்...