பிஜி தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


பிஜி தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
x
தினத்தந்தி 17 Sept 2018 7:01 AM IST (Updated: 17 Sept 2018 7:01 AM IST)
t-max-icont-min-icon

பிஜி தீவுகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. #FijiEarthquake

பசிபிக் கடற்பகுதியில் அமைந்த பிஜி தீவுகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளிவரவில்லை.

தெற்கு பிஜி தீவுகளை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ந் தேதி பிஜி தீவுகளில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2 என பதிவாகியது. பசிபிக் கடலில் நிலநடுக்க பாதிப்பு மிகுந்த நெருப்பு வளைய பகுதியில் பிஜி தீவு அமைந்திருக்கிறது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்களுடன் எரிமலை சீற்றமும் ஏற்படுகிறது
1 More update

Next Story