உலக செய்திகள்

குழந்தை பெற்றெடுத்த முதல் ஆண் மார்பகத்தை அகற்றுகிறார் + "||" + first male to have a baby Removes the breast

குழந்தை பெற்றெடுத்த முதல் ஆண் மார்பகத்தை அகற்றுகிறார்

குழந்தை பெற்றெடுத்த முதல் ஆண் மார்பகத்தை அகற்றுகிறார்
குழந்தை பெற்றெடுத்த முதல் ஆண் என்ற பெயருக்கு சொந்தக்காரரான ஹைடன் கிராஸ் தனது மார்பகத்தை அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.
இங்கிலாந்தை சேர்ந்த   22 வயதான ஹைடன் பிறக்கும் போது பெண்ணாக பிறந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் உடலில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஆணாக மாறும் சிகிச்சையை  செய்து கொண்டார். இதையடுத்து கடந்தாண்டு பேஸ்புக் நண்பர் ஒருவரின் விந்தணுவை தனது கர்ப்பபையில்  செலுத்தி கொண்டு அதன் மூலம் கர்ப்பமானார் ஹைடன். பின்னர் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்து, இங்கிலாந்தில்  குழந்தை பெற்றெடுத்த முதல் ஆண் என்ற பெருமையை பெற்றார்.


இந்நிலையில் தனது மார்பகத்தை அகற்றும் அறுவை சிகிச்சையை ஹைடன் தற்போது மேற்கொண்டு வருவதாக அவரே தெரிவித்துள்ளார். முதற்கட்ட சிகிச்சை ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் £19k செலவிலான இறுதிக்கட்ட அறுவை சிகிச்சையை அடுத ஆண்டு செய்து கொள்ள இருக்கிறார் ஹைடன். இது குறித்து ஹைடன் கூறுகையில், எனக்கு கிட்டத்தட்ட முழுமையான வாழ்க்கை அமைந்துள்ளது. அழகான குழந்தைக்கு தந்தையாகியுள்ளேன், இறுதியான அறுவை சிகிச்சை முடிந்துவிட்டால் என்னை நான் முழுவதுமாக உணர்வேன் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. நிலவில் மனிதன் கால் வைத்தது உண்மை இல்லை என கூறும் மற்றொரு வீடியோ வெளியானது
நிலவில் மனிதன் கால் வைத்தது உண்மை இல்லை என கூறும் ரெடி, ஆக்‌ஷன் என கூறும் படப்பிடிப்பு வீடியோ வெளியானது.
2. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு 2 வீரர்களுடன்சென்ற ரஷ்ய விண்கலம் அவசரமாக தரையிறக்கபட்டது
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு 2 விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற ரஷ்ய விண்கலம் அவசரமாக தரையிறக்கபட்டதாக நாசா தெரிவித்து உள்ளது.
3. வெப்பச் சமநிலையைப் பேணும் யானையின் வெடிப்புகள் கொண்ட தோல்
யானை தன் வெடிப்புகள் கொண்ட தோல் மூலம் 5 முதல் 10 மடங்கு வரையிலான நீரை சேமித்து வெப்பச் சமநிலையைப் பேணுகிறது
4. விற்பனை செய்யப்படும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட செவ்வாய் கிரக மண்
வினோத விளம்பரம்: விற்பனை செய்யப்படும் செயற்கையாக தயாரிக்கபட்ட செவ்வாய் கிரக மண்
5. உலகம் எப்போது அழியும்-அறிவியல் மேதை ஐசக் நியூட்டன்
உலகம் எப்போது அழியும் என விவரத்தை புனை பெயரில் வெளியிட்ட அறிவியல் மேதை ஐசக் நியூட்டன்