6,000 கோடி டாலர்கள் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல்வரி அமெரிக்காவுக்கு சீனா பதிலடி


6,000 கோடி டாலர்கள் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல்வரி  அமெரிக்காவுக்கு சீனா பதிலடி
x
தினத்தந்தி 19 Sep 2018 9:07 AM GMT (Updated: 19 Sep 2018 9:24 AM GMT)

அமெரிக்காவுக்கு பதிலடியாக 6,000 கோடி டாலர்கள் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பதாக சீனாவும் அறிவுத்தது.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ரூ.14.5 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது, இதன் தாக்கம் இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பை மேலும் சரிவடையச் செய்யும்.

இந்த நிலையில்  அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 6,000 கோடி டாலர்கள் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல்வரி விதிப்பதாக சீனாவும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சீனா வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா முயன்றால், எதிர்மறையான விளைவுகளைத்தான் சந்திக்க நேரிடும். உலகளாவிய வர்த்தக நடவடிக்கையில் சீனாவுக்கு இருக்கும் உரிமைகளை நிலைநாட்ட சில பதில் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது உள்ளது. அதை கருத்தில் கொண்டே அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு பெரும் வல்லரசுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்து இருப்பதால், வளரும் பொருளாாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் மிகுந்த அச்சமடைந்துள்ளன.

Next Story