உலகைச் சுற்றி.....

* பாகிஸ்தானுடனான ராணுவ உறவு, அந்த நாட்டுடனான பொது உறவில் முக்கிய தூணாக திகழ்கிறது என சீனா கூறுகிறது.
* ஐ.நா. சபையின் பாலின சமத்துவம் மற்றும் மகளிர் அதிகார வழங்கல் அமைப்பில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ரவி கர்காரா. இந்தியரான இவர் மீது செக்ஸ் புகார்கள் எழுந்தன. அவற்றின் மீது நடந்த விசாரணையை தொடர்ந்து, அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
* ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
* ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாதுகாப்பு காரணங்களையொட்டி தான் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு இல்லை என்று வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கூறி உள்ளார்.
* ஆப்கானிஸ்தானில் காபூல் ராணுவ பல்கலைக்கழகத்தின் அருகே நேற்று காலையில் 2 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதுபற்றிய கூடுதல் தகவல் வெளியாகவில்லை.
* ஈராக்கில் பாக்தாத்–கிர்குட் நகரங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் ஒரு பஸ்சை குறிவைத்து குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 16 பேர் பலியாகினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் போலீசார் ஆவர்.

Related Tags :
Next Story