உலகைச் சுற்றி...

* 2017–ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீதம், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 5 ஆசிய நாடுகளில் தான் நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
* பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கங்கள் தொடர்ந்து பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றன; 2017–ல் பயங்கரவாத விவகாரத்தில் அமெரிக்காவின் கவலைகளை போக்குகிற விதத்தில் பாகிஸ்தான் போதுமான அளவு செயல்படவில்லை என்று அமெரிக்கா கூறி உள்ளது.
* நெதர்லாந்து நாட்டில், ஜெர்மனி எல்லை அருகே, குழந்தைகளை ஏற்றிச்செல்வதற்கு பெற்றோர் பயன்படுத்துகிற சரக்கு சைக்கிள் மீது ரெயில் மோதி விபத்து நேரிட்டது. இதில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். ஒரு பெண் படுகாயம் அடைந்தார்.
* ஆஸ்திரேலியாவில் வடகிழக்கு கடலோர பகுதியில் 12 வயது சிறுமி, சுறா தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறாள். அந்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* பியாங்யாங் நகரில், அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார்.
* பாலஸ்தீனத்தில் காசாமுனை பகுதியில் நடந்த போராட்டத்தின்போது, இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதில் வாலிபர் ஒருவர் பலியாகி விட்டதாகவும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story