அமெரிக்கா : 3 பேரை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட பெண்


அமெரிக்கா : 3 பேரை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட பெண்
x
தினத்தந்தி 21 Sept 2018 8:19 AM IST (Updated: 21 Sept 2018 8:19 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் 3 பேரை சுட்டுக்கொன்று விட்டு பெண் ஒருவர் தானும் தற்கொலை செய்துகொண்டார்.

மேரிலாண்ட்,

அமெரிக்காவின் மேரிலான்ட் மாகாணத்தில் ஹார்பேர் கவுண்டி என்ற பகுதியில் மருந்து பொருட்கள் உற்பத்தி மையம் உள்ளது. இங்கு துப்பாக்கியுடன் புகுந்த பெண் ஒருவர் கண்ணில் பட்டவர்களை சரமாரியாக சுட்டார்.. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 5 பேர் காயமடைந்தனர். பின்னர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் அடையாளத்தை போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர். ரிட் ஏய்ட் வணிக நிறுவனத்தில்  தற்காலிக ஊழியராக பணியாற்றிய அந்தப்பெண்ணின் பெயர் ஸ்னோசியா மோஸேலே என்பதும் தெரியவந்துள்ளது. 

இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு பின்னணியில் ஏதேனும் சதிச்செயல் உள்ளதா? அல்லது மன அழுத்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தி தற்கொலை செய்து கொண்டாரா? என்று அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
1 More update

Next Story