

அமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 5-வது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 30.5 கோடியில், வெளிநாட்டு மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 6.7 கோடியாகும்.இந்நிலையில் அமெரிக்க சமூக அமைப்பு நடத்திய ஆய்வில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்காவின் மக்கள் தொகை 30. 5 கோடியில் 6.7 கோடி வேற்றுநாட்டு மொழிகளை பேசுகிறார்கள்.
அமெரிகாவில் இந்தி மிகவும் பரவலாக பேசப்படும் இந்திய மொழியாக உள்ளது. தொடர்ந்து குஜராத்தி, தெலுங்கு உள்ளது. 2010 மற்றும் 2017 ஆம் ஆணடி ஒப்பிடும் போது தெலுங்கு மொழி பேசுவது 86 சதவீதம் உயர்ந்து உள்ளது.
இந்தி மொழியை 8.63 லட்சம் பேரும்,குஜராத்தியை 4.34 லட்சம் பேரும், தொடர்ந்து தெலுங்கை 4.15 லட்சம் பேரும் பேசுகிறார்கள்.பெங்காலி மொழியை 2.23 லட்சம்பேர் பேசுகிறார்கள்.
அமெரிக்காவில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்நாட்டில் இந்திய மொழிகளில் அதிகம் பேரால் பேசப்படும் மொழி எது என்பதற்காக நடத்தப்பட்ட ஆய்விலேயே இது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில், 8 லட்சத்து 63 ஆயிரம் பேரால் பேசப்படுவதால் ஹிந்தி முதலிடத்திலும், 4 லட்சத்து 34 ஆயிரம் பேரால் பேசப்படுவதால் குஜராத்தி இரண்டாவது இடத்திலும் உள்ள நிலையில், தமிழ் மொழி 5-வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவிதமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.