கொடிய விஷம் கொண்ட பாம்புகள் உள்பட 400 வகை விலங்குகளுடன் வாழும் முதியவர்


கொடிய விஷம் கொண்ட பாம்புகள் உள்பட  400 வகை விலங்குகளுடன் வாழும் முதியவர்
x
தினத்தந்தி 21 Sep 2018 9:30 AM GMT (Updated: 21 Sep 2018 9:30 AM GMT)

கொடிய விஷம் கொண்ட பாம்புகள் உள்பட 400 வகை விலங்குகளுடன் 67 வயதான முதியவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார்.


பிரான்சில் பிலிப் கில்லட் என்ற விலங்குகளின் காதலர் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் என 400 வகை விலங்குகளுடன் வாழ்ந்து வருகிறார். பிரான்ஸ் நாட்டின் லூரே நதிக்கரையில் அமர்ந்திருக்கும் கிராமத்தில் வசித்து வருபவர் தான் பிலிப் கில்லட். 67 வயதான இவர் விலங்குகளின் காதலன் என்று பிரான்ஸ் நாட்டு மக்களால் அழைக்கப்படுகிறார். அவரது வீட்டில் அலி, கேட்டர் என இரு முதலைகள், ராட்சத ஆமை, நல்ல பாம்பு, கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் என வித்தியாசமான 400 வகை விலங்குகள் உள்ளன.

இப்படி ஒரு கூட்டு குடித்தனத்தை நடத்த ஏராளமாக செலவிட்டாலும், இயற்கையோடு இணைந்து வாழ்வது எப்படி என்பதை பிரான்ஸ் நாட்டினருக்கு தாம் கற்றுக் கொடுப்பதாக பிலிப் கூறியுள்ளார். விலங்குகளை வளர்க்க, வெளியூர்களுக்கு அழைத்துச் செல்ல பிரான்ஸ் அரசு பிலிப்பிற்கு எல்லா அனுமதிகளை கொடுத்திருந்தாலும், அவரது அண்டை அயலார் ஏதாவது ஒரு அவசரத்திற்கு கூட அவரின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் முன் அனுமதியின்றி உள்ளே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story