ஹாலண்டேயின் கருத்தால் பிரான்ஸ்-இந்தியா உறவு பாதிக்கும் : வெளியுறவு மந்திரி அச்சம்


ஹாலண்டேயின் கருத்தால் பிரான்ஸ்-இந்தியா உறவு பாதிக்கும் : வெளியுறவு மந்திரி அச்சம்
x
தினத்தந்தி 23 Sep 2018 11:45 PM GMT (Updated: 23 Sep 2018 8:00 PM GMT)

பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே, ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி தெரிவித்த கருத்துகள் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பாரீஸ்,

பிரான்ஸ் அரசாங்கம்   இந்த விவகாரம் இரு நாடுகளின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அந்நாட்டின் வெளியுறவு துணை மந்திரி ஜீன்–பாப்டிஸ்ட் லெமோனே கூறுகையில், ‘‘இதுபோன்ற கருத்துகள் (ஹாலண்டே தெரிவித்தது) வெளிநாடுகளை, முக்கியமாக சர்வதேச அளவில் பிரான்ஸ்-இந்தியா இடையேயான உறவை பாதிப்பதாக அமையும். இது யாருக்கும் உதவப்போவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக பிரான்சுக்கு எந்த விதத்திலும் பயன் அளிக்காது’’ என்று கவலை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘ஏனென்றால் ஒருவர் (ஹாலண்டே) நீண்ட காலமாக பதவியில் இல்லை. எனவே இதுமாதிரியான கருத்துகள் பிரான்ஸ்-இந்தியா இடையே நிலவும் ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். உண்மையில் இது பாராட்டுக்குரிய வி‌ஷயம் அல்ல’’ எனவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story