அந்தரத்தில் சினிமா பார்க்கும் அதிசய வசதி இங்கிலாந்தில் அறிமுகம்!


அந்தரத்தில் சினிமா பார்க்கும் அதிசய வசதி இங்கிலாந்தில் அறிமுகம்!
x
தினத்தந்தி 7 Oct 2018 4:23 PM IST (Updated: 7 Oct 2018 4:23 PM IST)
t-max-icont-min-icon

அந்தரத்தில் தொங்கியபடி சினிமா பார்க்கும் அதிசய வசதி இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் 4GEE என்ற நிறுவனம் சார்பில் முதன்முறையாக அந்தரத்தில் தொங்கியபடி 4ஜி தொழில்நுட்பத்தில் படம் பார்க்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

சுமார் 100 அடி உயரத்தில் தொங்கும் கிரேன் தட்டில் அமர்ந்த படி 20 பேர் கண்டுகளிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. 4ஜி தொழில் நுட்பத்தில் தெரியும் அதிநவீன படக்காட்சிகள் இதன் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.

ஆடி அசைந்து படம் பார்க்கும்படி இத்திரையரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.  நொறுக்குத் தீனி தேவைப்பட்டால், ட்ரோன் மூலம் அவை தியேட்டருக்கு அனுப்பி வைக்கப்படும். 

இந்த குட்டித் தியேட்டரில் பிரத்யேக கழிப்பறை வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த திரையரங்கிற்கு பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
1 More update

Next Story