

காபூல்,
வார்டாக் மாகாணத்தின் சில பகுதிகளை நேற்று முன்தினம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தலீபான் பயங்கரவாதிகள் சையத் அபாத் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகத்திற்கு தீ வைத்தனர். அந்த அலுவலகத்தில் இருந்த மாவட்ட காவல்துறை அதிகாரி உள்பட 10 போலீஸ்காரர்கள் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வார்டாக் மாகாணத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகளை பயங்கரவாதிகள் துண்டித்தனர். மேலும், லோகர், காஷ்னி உள்ளிட்ட மாகாணங்களுக்கு செல்லும் மின்கம்பிகளையும் துண்டித்ததால் அங்கு உள்ள பகுதிகள் இருளில் மூழ்கின.
தலீபான்கள் வசம் உள்ள பகுதிகளுக்கு விரைந்து சென்ற அரசு பாதுகாப்பு படை வீரர்கள், பயங்கரவாதிகளுடன் போரிட்டு அவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.