மூச்சு விட சிரமம்: தலையில் கத்தியால் துலை போட முயன்றவர்


மூச்சு விட சிரமம்:  தலையில் கத்தியால் துலை போட முயன்றவர்
x
தினத்தந்தி 8 Oct 2018 12:44 PM IST (Updated: 8 Oct 2018 12:44 PM IST)
t-max-icont-min-icon

மூக்கில் மூச்சு விட மிகவும் சிரமமாக இருந்தது, அதனால் தலையில் கத்தியை வைத்து குத்தினேன் என்று சாதரணமாக நபர் ஒருவர் கூறி உள்ளார்.




ரஷ்யாவின் டுனெட்ஸ்க் பகுதியில்யூரி ஜோகோவ்  என்ற நபர் தலையில் கத்தி கு த்தப்பட்டு நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், அவரைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் அந்த நபர் தலையில் கத்தியால் குத்தப்பட்டு சாதரணமாக இருந்தார். இதனால் போலீசார் அவரிடம் என்ன ஆனது என்று கேட்ட போது எனக்கு மூக்கில் மூச்சு விட சிரமமாக இருந்தது. அதன் காரணமாக தலையை கத்தியை வைத்து துளைத்தேன், ஆனால் தலையிலும் சுவாசிக்க முடியவில்லை, ஏனெனில் தலையில் கத்தி நிற்கிறது என்று கூறியுள்ளார்.

உடனே போலீசார் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்த செவிலியர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதன் பின் உடனடியாக அவருக்கு சிகிச்சை  மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு பத்திரமாக கத்தியை வெளியில் எடுப்பதற்கு சிறப்பு வாய்ந்த மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால், அருகில் உள்ள பெரிய நகரத்தில்  இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அதன் பின் கத்தி பத்திரமாக  நீக்கப்பட்டுவிட்டதாகவும், ஆனால் செப்டிக் ஆகுவதற்கு வாய்ப்பிருப்பதால், அவர் தொடர்ந்து மருத்துவமனையிலே கண்காணிக்கப்பட்டு வருவதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் உள்ளூரில் ஒரு டெக்னிசியனாக வேலை பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
1 More update

Next Story