சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் சுஷ்மா சுவராஜ்-க்கு சவுதி மாணவர்கள் கோரிக்கை


சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் சுஷ்மா சுவராஜ்-க்கு  சவுதி மாணவர்கள் கோரிக்கை
x

சவுதியில் இயங்கும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் என, இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜ்-க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரியாத்,

சவுதியில் ஜெட்டா நகரில் ஐ.ஐ.எஸ்.ஜெ., என்றழைக்கப்படும் இண்டர்நேஷனல் இந்தியன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. இதில் ஏராளமான இந்திய மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். 

தற்போது இந்த பள்ளியின் மாணவர்கள் பிரிவு இயங்கி வரும் கட்டடம் குறித்த பிரச்னையில் சவுதி நீதிமன்றம் வரும் 9-ம் தேதிக்குள் மாணவர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சுமார் 3,300 மாணவர்கள்  'தயவு செய்து தங்களுக்கு உதவுங்கள்' என கோரிக்கை விடுத்து மத்திய மந்திரிக்கு சுஷ்மா சுவராஜூக்கு, சமூக வலைதளத்தில் மனு அனுப்பிவைத்துள்ளனர்.  மேலும் 1,800க்கும் மேற்பட்டோர்  டுவிட்டரில் நேரிடையாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
1 More update

Next Story