தஜிகிஸ்தான் அதிபர் எமமொலி ரஹ்மானுடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

துஷன்பேவில் தஜிகிஸ்தான் அதிபர் எமோமலலி ரஹ்மோனுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்தித்துள்ளார்.
தஜிகிஸ்தான் அதிபர் எமமொலி ரஹ்மானுடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு
Published on

தஜிகிஸ்தான்,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தானில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் தனது மனைவி சவிதா கோவிந்துடன் இன்று தஜிகிஸ்தான் புறப்பட்டு சென்றார். இந்தநிலையில் தஜிகிஸ்தான் சென்றடைந்த ராம்நாத் கோவிந்த் தஜிகிஸ்தான் அதிபர் எமமொலி ரஹ்மானை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி தொழிநுட்பம், வேளாண்மை ஆகிய துறைகளில் இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டது. மேலும் பாரம்பரிய மருத்துவம், கலாச்சாரம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்டவற்றிலும் இந்தியா-தஜிகிஸ்தான் ஒப்பந்தம் போடப்பட்டது.

2009ம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் தஜிகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறை. இருநாடுகளுக்கு இடையே நெருங்கிய நட்புறவு தொடர்ந்து வரும் நிலையில், ராம்நாத் கோவிந்தின் பயணம் இந்த உறவை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com