

மெக்சிகோவின் ஆக்கெட்பெக் பகுதியில் குடியிருந்து வருபவர் ஜுவான் கார்லோஸ் மற்றும் அவரது மனைவி பெட்ரீசியா. ஆக்கெட்பெக் பகுதியில் திடீரென்று இளம் பெண்கள் மாயமான விவகாரத்தில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியானது.
தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் ஜுவான் கார்லோஸின் குடியிருப்பில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து மனித உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்தே அந்த தம்பதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தமது மனைவியால் ஏமாற்றி குடியிருப்புக்கு அழைத்து வரப்படும் இளம் பெண்களை ஜுவான் கர்லோஸ் கழுத்தை அறுத்து கொலை செய்வதாகவும், அதன் பின்னர் அந்த சடலத்துடன் பாலியல் உறவு கொள்வதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான்.
பின்னர் அந்த சடலங்களை துண்டு துண்டாக வெட்டி வளர்ப்பு பிராணிகளுக்கு உணவாக்கியுள்ளனர். முதலில் போலீசாரின் விசாரணையில் ஜுவான் 10 கொலைகள் வரை செய்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் விசாரணையில் 20 பெண்கள் என தெரியவந்தது. ஞாயிறன்று நடந்த நீதிமன்ற விசாரணையில், குறித்த நபர் சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் என்பதால் விசாரணை முடியும் வரை சிறையிலேயே இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.