உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 12 Oct 2018 10:45 PM GMT (Updated: 12 Oct 2018 8:32 PM GMT)

உகாண்டாவில் பலத்த மழையால் மண் சரிவு ஏற்பட்டு, 34 பேர் பலியாகி உள்ளனர்.


* பாகிஸ்தானில் குலாம் சர்வார் சாம்பானி என்ற கிராமத்தில் ஒரு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில், அந்தப் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 9 குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். 2 குழந்தைகள், காயங்களுடன் உயிர் தப்பினர்.

* ஏமன் போரில் அதிபர் படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப்படைகள் களம் இறங்கி வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இதில் அப்பாவி மக்கள் பலியாவது தொடர்கதை ஆகி வருகிறது. அதிலும் இதுவரை 1,248 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. சவுதி கூட்டுப்படைகள் வான் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் குழு வலியுறுத்தி உள்ளது.

* உகாண்டாவில் மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழையால் மண் சரிவு ஏற்பட்டு, 34 பேர் பலியாகி உள்ளனர்.

* சீனாவுக்கு சிவில் அணுசக்தி தொழில் நுட்ப ஏற்றுமதி செய்வதை கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்து இருக்கிறது.

* இதய அறுவை சிகிச்சை செய்து ‘ஸ்டெண்டு’கள் பொருத்துவதற்கு மாற்றாக வேறு சாதனங்களை கண்டுபிடித்து, அவற்றை மனிதர்களுக்கு பொருத்தி சோதித்துப் பார்க்கும் முயற்சியில் அமெரிக்க மருத்துவ நிறுவனம் இறங்கி உள்ளது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கிரண் பட்டேல் என்ற இதய மருத்துவ நிபுணர் 60 மில்லியன் டாலர் (சுமார் ரூ.450 கோடி) முதலீடு செய்துள்ளார்.



Next Story