உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 13 Oct 2018 11:15 PM GMT (Updated: 13 Oct 2018 6:52 PM GMT)

அமெரிக்காவில் மைக்கேல் புயல் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.


* ஆப்கானிஸ்தான், தக்கார் மாகாணத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பெண் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்களை குறிவைத்து நடந்த மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர்.

* பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான 2 ஊழல் வழக்குகளில் விசாரணையை முடிப்பதற்கு அடுத்த மாதம் 17-ந் தேதி வரை அவகாசம் வழங்கி, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

* சவுதி அரேபிய அரசை விமர்சித்து வந்தவர் அந்த நாட்டு பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி. இவர் துருக்கியில் இஸ்தான்புல் சவுதி அரேபிய துணைத்தூதரகத்தில் காணாமல் போனார். அவர் கொலை செய்யப்பட்டு விட்டதாக அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக சவுதி அரேபிய மன்னர் சல்மானிடம் பேசுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி உள்ளார்.

* இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முகமது அன்வர்கான் காசி மீதான தவறான பணி நடத்தை குற்றச்சாட்டுகளை, சுப்ரீம் நீதித்துறை கவுன்சில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

* அமெரிக்காவில் மைக்கேல் புயல் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.



Next Story