கிரீஸ்: அகதிகளை ஏற்றி வந்த கார் விபத்து - 11 பேர் பலி


கிரீஸ்: அகதிகளை ஏற்றி வந்த கார் விபத்து - 11 பேர் பலி
x
தினத்தந்தி 14 Oct 2018 11:00 PM GMT (Updated: 14 Oct 2018 6:57 PM GMT)

கிரீஸ் நாட்டில் அகதிகளை ஏற்றி வந்த கார் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில் 11 பேர் பலியாயினர்.

ஏதென்ஸ்,

கிரீஸ் நாட்டின் வடக்கு பகுதியில் நேற்று முன்தினம் அகதிகளை ஏற்றி வந்த கார், எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தது.

இந்த கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியாகினர். இதில் 10 பேர் துருக்கியில் இருந்து சட்ட விரோதமாக கிரீஸ் வந்த அகதிகள். எஞ்சிய ஒருவர் வாகனத்தின் டிரைவர் ஆவார். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான 11 பேரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் லாரியின் டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட விரோதமாக வருகிற அகதிகள் நிலை பரிதாபமாகி வருகிறது. ஒரு பக்கம் ஐரோப்பிய நாடுகளின் சட்டப்பிடியில் சிக்குகின்றனர். இன்னொரு புறம் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். கடந்த ஜூன் மாதம்கூட, 16 அகதிகளை ஏற்றிவந்த ஒரு வேன், கிரீஸ் நாட்டின் வடக்கு பகுதியில் விபத்தில் சிக்கி 6 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.



Next Story