ஜெர்மனியில் விமானம் மோதி 3 பேர் பலி


ஜெர்மனியில் விமானம் மோதி 3 பேர் பலி
x
தினத்தந்தி 15 Oct 2018 11:30 PM IST (Updated: 15 Oct 2018 11:01 PM IST)
t-max-icont-min-icon

ஜெர்மனியில் விமானம் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெர்லின்,

ஜெர்மனியின் கெஸ்சே மாகாணம் புல்டா நகரில் உள்ள வசர்குப்பே மலைக்கு அருகே விமான நிலையம் அமைந்துள்ளது.

நேற்று மாலை தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இந்த விமான நிலையத்தில் தரையிறங்க வந்தது. குறிப்பிட்ட உயரத்துக்கு கீழே இறங்கிய நிலையில் திடீரென விமானத்தை தரையிறக்க முடியாமல் போனது. இதையடுத்து விமானி விமானத்தை மேல் நோக்கி பறக்க வைக்க முயன்றார்.

ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த விமானம் விமான நிலையத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு விமான சாலையில் விழுந்தது. அதன் பின்னரும் நிற்காமல் இயங்கிய விமானம் சாலையில் குழுமியிருந்த மக்கள் மீது மோதியது. இதில் சாலையில் நின்றுகொண்டிருந்த 2 பெண்களும், ஒரு சிறுவனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

மேலும் 56 வயதான விமானி மற்றும் 3 விமான பயணிகள் உள்பட 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

1 More update

Next Story