உலக செய்திகள்

மோனிகா லெவின்ஸ்கியின் விருப்பத்தின் பேரில் தான் கிளிண்டன் காதல் கொண்டார் -ஹிலாரி + "||" + Hillary Clinton denies Bill's affair with Monica Lewinsky was an 'abuse of power'

மோனிகா லெவின்ஸ்கியின் விருப்பத்தின் பேரில் தான் கிளிண்டன் காதல் கொண்டார் -ஹிலாரி

மோனிகா லெவின்ஸ்கியின் விருப்பத்தின் பேரில் தான் கிளிண்டன்  காதல் கொண்டார் -ஹிலாரி
மோனிகா லெவின்ஸ்கியின் விருப்பத்தின் பேரில் தான் கிளிண்டன் காதல் கொண்டார் என் அவரது மனைவி ஹிலாரி கிளிண்டன் கூறி உள்ளார்.
 வாஷிங்டன்

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன். இவர் பதவி வகித்த போது  1998-ம் ஆண்டில் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த பெண் ஊழியர் மோனிகா லெவின்ஸ்கியுடனான காதல் விவகாரம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதை தொடர்ந்து பில்கிளிண்டனை அதிபர் பதவியில் இருந்து நீக்க வகை செய்யும் தீர்மானத்தை எதிர்கட்சியாக இருந்த குடியரசு கட்சி கொண்டு வந்தது. ஆனால் அது தோற்கடிக்கப்பட்டது.

தற்போது ‘மீ டூ’ விவகாரம் சர்வதேச அளவில் சூடுபிடித்துள்ள நிலையில் கிளிண்டன்-மோனிகா லெவின்ஸ்கியின் காதல் விவரம் குறித்த பிரச்சினை 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிளம்பியுள்ளது.

நியூயார்க்கை சேர்ந்த குடியரசு கட்சியின் செனட்டர் கிர்ஸ்டன் கில்பிராண்டு அளித்த பேட்டியில் கூறும்போது, ‘செக்ஸ்’ பிரச்சினையில் சிக்கிய கிளிண்டன் அப்போதே தனது பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும். தனது அதிகாரத்தை பயன்படுத்தி மோனிகா லெவின்ஸ்கியுடன் ‘செக்ஸ்’சில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டினார்.

அதற்கு கிளிண்டனின் மனைவியும், அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஹிலாரி கிளிண்டன் பதில் அளித்து இருக்கிறார். ‘‘பில் கிளிண்டன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை. அதை என்னால் நிச்சயமாக கூற முடியும். இப்பிரச்சினையின் போது மோனிகா லெவின்ஸ்கிக்கு 22 வயது. அவர் ‘மேஜர்’ ஆக இருந்தார். அவரது விருப்பத்தின் பேரில் தான் கிளிண்டன் அவர் மீது காதல் வயப்பட்டிருந்தார் என தெரிவித்துள்ளார்.