உலக செய்திகள்

சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம் + "||" + Globally, Oman in top 10 for police services, quality roads

சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்

சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்
உலக பொருளாதாரத்துறை சார்பில் உலக அளவில் 12 துறைகளில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியல் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.
மஸ்கட்

ஓமன் போலீஸ் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உலக பொருளாதாரத்துறை சார்பில் உலக அளவில் 12 துறைகளில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியல் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுற்றுலாவுக்கு உகந்த நாடுகளின் பட்டியலில் மிகவும் பாதுகாப்பான நாடு என ஓமன் முதல் இடத்தை பிடித்துள்ளது.மொத்தம்140 நாடுகளின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில் இதுவரை ஓமனில் எந்தவித பயங்கரவாத செயல்களோ அல்லது அசம்பாவிதங்களோ நடைபெறவில்லை என்பதை தெரிவிக்கிறது.

அது மட்டுமல்லாமல்அரபு நாடுகளில் சிறந்த போலீஸ் சேவைக்கான பட்டியலில் ஓமன் போலீஸ் 5-வது இடத்தைபிடித்துள்ளது .உலக அளவில் ஓமன் நாடானது மிகவும் பாதுகாப்பான நாடு என்பதை இந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.தொடர்ந்து பாதுகாப்புதுறையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.