சிரியாவில் அமெரிக்க ஆதரவு படைகள் தாக்குதல்; 35 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி


சிரியாவில் அமெரிக்க ஆதரவு படைகள் தாக்குதல்; 35 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
x
தினத்தந்தி 20 Oct 2018 9:48 PM IST (Updated: 20 Oct 2018 10:19 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க ஆதரவு படைகள் சிரியாவில் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பெய்ரூட்,

சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் கடந்த பல வருடங்களாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை ராணுவம் கொண்டு அரசு கட்டுப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், அரசுக்கு எதிராக ஐ.எஸ். அமைப்பினரும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான படைகள் போரில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் சிரிய மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஹாஜின் நகரில் அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 28 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.  இதேபோன்று சிரிய ஜனநாயக படையினர் நடத்திய தரைவழி தாக்குதலில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.
1 More update

Next Story