உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 26 Oct 2018 11:00 PM GMT (Updated: 26 Oct 2018 7:13 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் 3 செல்போன்கள் இருப்பதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு செய்தி வெளியிட்டது.

* கூகுள் இணைய தள நிறுவனத்தில், பாலியல் தொல்லை புகாருக்கு ஆளான 48 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் முதுநிலை மேலாளர்களாக இருந்தவர்கள். இந்த தகவலை அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தமிழர் சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ளார்.

* வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை மத்திய புலனாய்வு படை (சிஐஏ) தலைவர் ஜினா காஸ்பெல் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அவர், தான் துருக்கிக்கு சென்று, சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை தொடர்பாக நடத்தி வந்த விசாரணை பற்றிய தகவல்களை டிரம்பிடம் பகிர்ந்து கொண்டார்.

* ரியாத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், சவுதி அரேபியா 56 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து 14 ஆயிரத்து 400 கோடி) மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டுள்ளது.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் 3 செல்போன்கள் இருப்பதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு செய்தி வெளியிட்டது. இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. அதில் டிரம்பிடம் ஒரே ஒரு ஐபோன் மட்டுமே உள்ளதாகவும், அது அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ ஐபோன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஆப்கானிஸ்தான் பயங்கரவாத அமைப்பான தலீபானின் முன்னாள் துணைத்தலைவர் முல்லா அப்துல் கனி, பாகிஸ்தானில் 9 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்தார். இப்போது அவர் விடுவிக்கப்பட்டு விட்டார். இதை ஆப்கானிஸ்தான் தலீபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

Next Story