வரலாற்று அதிசயம்: இரு பெண்களின் கர்பப்பையில் சுமந்து பெற்றெடுத்த குழந்தை


வரலாற்று அதிசயம்: இரு பெண்களின்  கர்பப்பையில்  சுமந்து பெற்றெடுத்த குழந்தை
x
தினத்தந்தி 31 Oct 2018 12:12 PM GMT (Updated: 31 Oct 2018 12:12 PM GMT)

அமெரிக்காவை சேர்ந்த ஓரினசேர்க்கையாளர்களான இரண்டு பெண்கள், ஒரு குழந்தையை இருவரின் கர்பப்பையிலும் சுமந்து பெற்றெடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.


அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஆஷ்லே மற்றும் ப்ளிஸ் என்ற ஓரினசேர்க்கையாளர்கள் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட இருவரும், செயற்கை கருவுறுதல் மையத்திற்கு சென்று மருத்துவர் கேத்தி டூடியின் ஆலோசனையை பெற்றுள்ளனர்.

பின்னர் நன்கொடையாளர் ஒருவரின் உயிரணுக்கள் பிளெஸ்ஸின் காப்சூலில் வைக்கப்பட்டு கருவுர செய்யப்பட்டது. ஆரம்ப கரு முட்டை வளர்ச்சியடைய துவங்கியதும், 5 நாட்களுக்கு பிறகு, பிளெஸ்ஸின் கருப்பையிலிருந்து அகற்றப்பட்டு ஆஷ்லேவின் கருப்பைக்கு மாற்றி வைக்கப்பட்டது. 9 மாதம் கழித்து இந்த தம்பதியினருக்கு ஸ்டெஸ்டனைப் என்ற மகன் பிறந்தான். ஸ்டெஸ்டன் தற்போது 5 மாத குழந்தையாக உள்ளான். இந்த சம்பவம் பற்றி கூறும் மருத்துவர்கள், இது மருத்துவ உலகில் ஒரு வரலாற்று விந்தை என தெரிவித்துள்ளனர்.

Next Story