சி.என்.என் செய்தியாளருடன் டொனால்டு டிரம்ப் வாக்குவாதம்


சி.என்.என் செய்தியாளருடன் டொனால்டு டிரம்ப் வாக்குவாதம்
x
தினத்தந்தி 8 Nov 2018 7:49 AM GMT (Updated: 8 Nov 2018 7:49 AM GMT)

சி.என்.என் செய்தியாளருடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாஷிங்டன்,

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப், சி.என்.என் செய்தியாளர் எழுப்பிய கேள்வியால் ஆவேசம் அடைந்தார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் இடைத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பிரதிநிதிக்களுக்கான இடைத் தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி சரிவைச் சந்தித்தது. 

இதன்பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது, சிஎன்என் செய்தியாளர் அகோஸ்டா, மத்திய அமெரிக்காவில் இருந்து தெற்கு அமெரிக்க எல்லைக்கு இடம்பெயரும் அகதிகள் குறித்துக் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து மற்றொரு கேள்வியைக் கேட்ட அகோஸ்டாவிடம், போதும் அமருங்கள் என  டிரம்ப் கூறினார். இந்த விவகாரத்தால், டிரம்ப், பத்திரிகையாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து, வெள்ளை மாளிகை செல்வதற்கான அனுமதி நுழைவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அகஸ்டோ தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் நடவடிக்கைக்கு செய்தியாளர்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 

Next Story