உலக செய்திகள்

சீனா தனது சர்வதேச விண்வெளி நிலையத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது + "||" + China unveils new 'Heavenly Palace' space station as ISS days numbered

சீனா தனது சர்வதேச விண்வெளி நிலையத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது

சீனா தனது சர்வதேச விண்வெளி நிலையத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது
சீனா தான் உருவாக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் படங்களை வெளியிட்டு உள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தினை அமைக்கும் நோக்கத்துடன்  சொந்தமாக முதலாவது விண்வெளி நிலையத்தை சுமார் 20 வருடங்களாக சீனா உருவாக்கி வருகின்றது.எனினும் இதுவரை காலமும் இதன் வடிவம் இரகசியமாகவே வைத்து இருந்தது. இந்நிலையில் தற்போது புகைப்படம் உட்பட மேலும் சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.இது 55 அடிகள் நீளமானதாகவும், 60 டன்  எடை கொண்டதாகவும் காணப்படுகின்றது. சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையமானது தற்போது உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தினை விட சிறியதாக இருக்கின்ற போதிலும், அமெரிக்காவிலுள்ள கால்பந்து மைதானங்களை விடவும் பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்ப ரீதியாக இப் புதிய நிலையமானது சீனாவுக்கு சொந்தமாக இருக்கின்ற போதிலும், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் கட்டுமானப் பணிகள் 2022 ஆம் ஆண்டளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா
பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.
2. சீனாவின் ஷாங்காய் நகரில் கட்டிடச் சுவர் இடிந்து விழுந்து விபத்து -10 பேர் பலி
சீனாவில் ஷாங்காய் நகரில் கட்டிடச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் அசார் பெயர் விவகாரம் சரியாக தீர்க்கப்பட வேண்டும் -சீனா
சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் அசார் பெயர் விவகாரம் சரியாக தீர்க்கப்பட வேண்டும் என சீனா கூறி உள்ளது.
4. ‘அவெஞ்சர்ஸ்’ படம் பார்த்து தேம்பி, தேம்பி அழுத இளம் பெண் - மூச்சுதிணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி
சீனாவில் அவெஞ்சர்ஸ் படம் பார்த்து இளம் பெண் ஒருவர் தேம்பி, தேம்பி அழுத வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
5. உலகைச்சுற்றி...
சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டின் பிரதமர் லி கெகியாங்கை சந்தித்து பேசினார்.