உலக செய்திகள்

ஈராக்கில் பயங்கர குண்டுவெடிப்பு - 2 பேர் உடல் சிதறி உயிரிழப்பு + "||" + Deadly bombings in Iraq - 2 people dead

ஈராக்கில் பயங்கர குண்டுவெடிப்பு - 2 பேர் உடல் சிதறி உயிரிழப்பு

ஈராக்கில் பயங்கர குண்டுவெடிப்பு - 2 பேர் உடல் சிதறி உயிரிழப்பு
ஈராக்கில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில், 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
பாக்தாத்,

ஈராக் நாட்டில் மொசூல் நகருக்கு மேற்கில், வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனம் ஒன்றை தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிக்க வைத்தனர். பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின.

இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 2 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.


ஒரு உணவு விடுதியின் அருகே நடந்த இந்த குண்டுவெடிப்பால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

கடந்த வாரம் இதே பகுதியில் ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனத்தை குறிவைத்து குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதும், அதில் ஒரு வீரர் பலியானதும், 7 பேர் படு காயம் அடைந்ததும் நினைவுகூரத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ஈராக்: தொடர் குண்டுவெடிப்பு - ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலி
ஈராக்கில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலியாயினர்.
2. ஈராக்கில் அமெரிக்கா படைகள் நடத்திய தாக்குதலில் 25 ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலி
ஈராக்கில் அமெரிக்கா படைகள் நடத்திய தாக்குதலில் 25 ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலியாகினர்.
3. ஈராக்கில் புதிய அதிபர், பிரதமர் தேர்வு
ஈராக் புதிய அதிபராக பர்ஹாம் சாலேவும், பிரதமராக அதேல் அப்துல் மாஹ்தியும் தேர்வு செய்யப்பட்டனர்.
4. உலகைச் சுற்றி
ஈராக்கில் நடந்த 2 குண்டுவெடிப்புகளில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார்.
5. ஈராக்கில் பதற்றம் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை; 3 பேர் பலி
ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த வன்முறையில் 3 பேர் பலியானார்கள். அரசு அலுவலகங்கள், செய்தி சேனலுக்கு தீ வைக்கப்பட்டது.