உலக செய்திகள்

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவுக்கு எதிர்ப்பு - இங்கிலாந்தில் மந்திரி ராஜினாமா + "||" + Resistance to the withdrawal from the European Union - Minister in England resigned

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவுக்கு எதிர்ப்பு - இங்கிலாந்தில் மந்திரி ராஜினாமா

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவுக்கு எதிர்ப்பு - இங்கிலாந்தில் மந்திரி ராஜினாமா
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இங்கிலாந்தில் மந்திரி ராஜினாமா செய்தார்.
லண்டன்,

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவை இங்கிலாந்து நாடு எடுத்துள்ளது. 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கான முறையான நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து போக்குவரத்துதுறை ராஜாங்க மந்திரி ஜோ ஜான்சன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


ஏற்கனவே இந்த விவகாரத்தில் பதவி விலகிய வெளியுறவு மந்திரி போரீஸ் ஜான்சனின் சகோதரர்தான் இந்த ஜோ ஜான்சன் என்பது குறிப்பிடத்தக்கது. தனது சகோதரர் பதவி விலகி இருப்பதை போரீஸ் ஜான்சன் வரவேற்றுள்ளார்.

ஜோ ஜான்சன் பதவி விலகி இருப்பது பிரதமர் தெரசா மேயுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு டிரம்ப் அதிரடி யோசனை
ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற விரும்புகிறது. அந்த முடிவை பெரும்பாலான மக்கள் வாக்கெடுப்பு மூலம் ஆதரித்தனர்.