சட்டவிரோத குடியேற்றம் : அமெரிக்காவில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் 2400 இந்தியர்கள்


சட்டவிரோத குடியேற்றம் : அமெரிக்காவில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் 2400 இந்தியர்கள்
x
தினத்தந்தி 13 Nov 2018 8:55 AM GMT (Updated: 13 Nov 2018 8:55 AM GMT)

சுமார் 2,400 இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

வாஷிங்டன்

அமெரிக்காவில், டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றம் குறித்த  அடக்குமுறையில் பெரிய  பின்னடைவை  சந்தித்து வருகிறது. சட்டவிரோத குடியேற்றத்திற்காக அமெரிக்காவில் சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களில் இந்தியர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். சுமார் 2,400 இந்தியர்கள் சட்டவிரோதமாக நாடு கடந்து செல்ல முயன்றபோது அமெரிக்க போலீசார்  தடுத்து சிறையில்  வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கைதிகளில் பெரும்பாலானவர்கள் பஞ்சாபில் இருந்து சென்றவர்கள் ஆவார்கள் , அவர்கள் இந்தியாவில் குற்றசெயல்களில் ஈடுபட்டுவிட்டு தண்டனையை  எதிர்கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் அமெரிக்காவில் தஞ்சம் கோரி வருகின்றனர்.

வட அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷன் (NAPA) தலைவர் சத்னம் எஸ் சஹால் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில் சிறையில் உள்ள கைதிகளில், பஞ்சாபில் இருந்து வந்தவர்களில் பெரும்பாலோர் அமெரிக்காவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது  அக்கறைக்குரிய விசயமாகும்.  பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனைகாக காத்திருப்பவர்கள் ஆவார்கள் என கூறி உள்ளார்.

வட அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷன் வெளியிட்டு உள்ள தகவலில், அமெரிக்காவில் உள்ள 86 சிறைச்சாலைகளில் 2383 இந்தியர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story