இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்


இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்
x
தினத்தந்தி 15 Nov 2018 6:14 AM GMT (Updated: 15 Nov 2018 6:14 AM GMT)

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அணி எம்பிக்களால் சபாநாயகர் சுற்றி வளைக்கப்பட்டார்.

கொழும்பு
இலங்கை நாடாளுமன்ற கூட்டம் இன்று காலை பத்து மணியளவில் பெரும் கூச்சல் குழப்பத்துடன் ஆரம்பமாகியிருந்தது. எனினும், ராஜபக்சே தனது உரையை ஆரம்பித்து நிறைவு செய்தவுடன் வாக்கெடுப்பு நடத்த முயற்சி செய்யப்பட்டது. இந்த முயற்சியின் பின்னர் நாடாளுமன்றில் அமளி ஏற்பட்டதுடன், ராஜபக்சே அணி எம்பிக்கள் சபாநாயகரை சுற்றிவளைத்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடி சில்வா, தான் சபாநாயகரை பாதுகாத்ததாக தனது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
எம்பிக்களிடையே நடந்த மோதலில் சிலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மோதல் அதிகமான நிலையில், சாபநாயகர், ராஜபக்சே மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியுள்ளார்.



Next Story