துயரம் - கொடூரம் கசோக்கி கொலை தொடர்பான ஆடியோவை நான் கேட்கவில்லை? டொனால்டு டிரம்ப்


துயரம் - கொடூரம் கசோக்கி கொலை தொடர்பான ஆடியோவை நான்  கேட்கவில்லை? டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 19 Nov 2018 10:42 AM GMT (Updated: 19 Nov 2018 10:42 AM GMT)

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை தொடர்பான ஆடியோ பதிவு குறித்து தனக்கு விவரிக்கப்பட்டதாகவும் ஆனால் தான் அதை கேட்கப்போவதில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2ஆம் தேதி, இஸ்தான்புல்லில் உள்ள சவுதிஅரேபிய  தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி  கொலை செய்யப்பட்டார். ஜமால் கசோக்கியின் கொலை சவுதி அரேபிய  பட்டத்து இளவரசரால் ஆணையிடப்பட்டது என்று சிஐஏ தெரிவித்தது. ஆனால் வெள்ளை மாளிகை அதனை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் இந்த குற்றச்சாட்டை சவுதி அரசு  மறுத்துள்ளது. இதில் பட்டத்து இளவரசருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கூட்டாளியாக சவுதி அரேபியா இருப்பதால், டிரம்ப் கடுமையான நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

தனக்கு கிடைத்த  டேப் இந்த கொலை குறித்து  முழுவதும் விளக்கப்பட்டுவிட்டதால் தான் அது குறித்து முழுவதுமாக கேட்கப்போவதில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.

"அதனை கேட்காமலே அந்த டேப்பில் என்ன இருந்தது என்று எனக்கு தெரியும்" என பாக்ஸ் நியூஸிடம் தெரிவித்த டிரம்ப், அந்த டேப் மிக "வன்முறையானது, மோசமானது, கொடூரமானது" என்றும் கூறினார்.

மிகவும் அதிர்ச்சியான அந்த ஆடியோ பதிவை துருக்கி, அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய கூட்டணி நாடுகளிடம் கொடுத்தது.

தனக்கு இந்த கொலையில் தொடர்பு இல்லை என சல்மான் டிரம்பிடம் தெரிவித்தார். தனக்கு இந்த கொலை பற்றி எதுவும் தெரியாது என பட்டத்து இளவரசர் சல்மான் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார் டிரம்ப்.

இந்த கொலையில் பட்டத்து இளவரசர் சல்மானுக்கு நேரடி தொடர்பு இருக்கும்படியான ஆதாரங்கள் எதையும் சிஐஏ வழங்கவில்லை எனினும் சல்மானின் ஒப்புதல் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஆனால் சனிக்கிழமையன்று ஜமால் கசோக்கி கொலை தொடர்பாக விடை தெரியாத பல கேள்விகள் உள்ளதால் இதில் இறுதி முடிவை அமெரிக்கா எட்டவில்லை என அந்நாட்டின் உள்துறை அமைச்சக்கம் தெரிவித்துள்ளது.

சிஐஏவின் விசாரணை குறித்து டிரம்ப் அதனிடம் பேசியுள்ளார். பாக்ஸ் நியூஸின் நேர்காணல் சிஐஏவின் கண்டுபிடிப்புகள் வெளியான செய்திக்கு முன்னதாக எடுக்கப்பட்டது.

டிரம்பின் கூட்டாளியான குடியரசுக் கட்சியை சேர்ந்த செனட்டர் லிண்ட்சி கிராஹாம், டிரம்ப் சல்மானின் மறுப்பை நம்பவில்லை என தெரிவித்துள்ளார்.

Next Story