உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 19 Nov 2018 10:15 PM GMT (Updated: 19 Nov 2018 8:33 PM GMT)

மியான்மரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


* மியான்மரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளான பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹைதியில் ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* வியட்நாமின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டிராங்க் நகரை தாக்கிய புயலை தொடர்ந்து அங்கு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்த நகர் வெள்ளக்காடானது. மேலும் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆனது.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்தது. 10,500 வீடுகள் தீயில் கருகி சாம்பலாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story