கென்யாவில் வணிக மையத்தில் துப்பாக்கிச்சூடு - இத்தாலி பெண் ஊழியர் கடத்தல்


கென்யாவில் வணிக மையத்தில் துப்பாக்கிச்சூடு - இத்தாலி பெண் ஊழியர் கடத்தல்
x
தினத்தந்தி 21 Nov 2018 11:15 PM GMT (Updated: 21 Nov 2018 7:13 PM GMT)

கென்யாவில் வணிகமையம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மேலும் இத்தாலி பெண் ஊழியர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டார்.

நைரோபி,

ஆப்பிரிக்க நாடான கென்யாவில், கிலிப்பி நகரில் ஒரு வர்த்தக மையம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 3 பேர் குழந்தைகள்.

அவர்களை சுட்டு வீழ்த்திய அந்த நபர்கள், அங்கிருந்து 23 வயதான ஒரு பெண்ணை துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்றனர். அந்தப் பெண், இத்தாலியை சேர்ந்தவர் என்றும், தொண்டு அமைப்பு ஒன்றில் சேர்ந்து பணியாற்றி வந்தார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் படையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதின் பின்னணி என்ன, தாக்குதல் நடத்திய நபர்கள் யார் என்பது பற்றி உடனடியாக எதுவும் தெரியவரவில்லை. ஆனால் இதை பயங்கரவாத தாக்குதல் என்று கருதி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.



Next Story