உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 6 Dec 2018 4:15 AM IST (Updated: 6 Dec 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

பசிபிக் தீவுகளில் ஒன்றான நியூ கேலடோனியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

* ரஷிய ராணுவத்தில் புதிதாக 6 அதிநவீன லேசர் ஆயுதங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

* வட கொரியாவும், தென் கொரியாவும் கூட்டாக சாலை ஆய்வு செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளன.

* பொலிவியா நாட்டில் அதிபர் எவோ மொராலஸ் 4-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

* பசிபிக் தீவுகளில் ஒன்றான நியூ கேலடோனியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாக பதிவானது. அதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

* ரஷியா உடனான தனது தொடர்பு குறித்து அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ.யிடம் தவறான தகவல்களை வழங்கியதாக அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் கோர்ட்டில் ஒப்புக்கொண்டார். ஆனால் அவர், அமெரிக்க தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்த விசாரணையில் பெரிதும் உதவியுள்ள நிலையில், அவருக்கு கோர்ட்டு தண்டனை வழங்க தேவையில்லை என்று ராபர்ட் முல்லர் குழு பரிந்துரை செய்துள்ளது.

* ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாணத்தில் நடந்த கண்ணி வெடி தாக்குதலில் 2 போலீஸ் அதிகாரிகள் பலியாகி உள்ளனர்.

* லிபியாவில் அகதிகள் வந்த படகு மிசுரட்டா என்ற இடத்தில் கடலில் கவிழ்ந்தது. இதில் 15 அகதிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

* ஊழல் புகார்களுக்கு மத்தியில் ஈக்குவடார் நாட்டின் துணை அதிபர் மரியா அலெஜாண்டிரா பதவி விலகி உள்ளார்.


1 More update

Next Story