இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

x
தினத்தந்தி 6 Dec 2018 7:46 AM IST (Updated: 6 Dec 2018 9:39 AM IST)
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது.
ஜகார்தா,
இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அதிகாலை 1.02 மணிக்கு ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு தெருக்களில் கூடினர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்தும் தற்போது வரை தகவல் வெளியாகவில்லை.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





