உலக செய்திகள்

சுவிஸ் நாட்டில் அதிபராக நிதி மந்திரி தேர்வு + "||" + Chancellor of the Swiss country Finance Minister selection

சுவிஸ் நாட்டில் அதிபராக நிதி மந்திரி தேர்வு

சுவிஸ் நாட்டில் அதிபராக நிதி மந்திரி தேர்வு
சுவிஸ் நாட்டின் அதிபராக அந்த நாட்டின் நிதி மந்திரியாக இருந்து வரும் உய்லி மவுரர், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜெனீவா,

சுவிஸ் என்றழைக்கப்படுகிற சுவிட்சர்லாந்து நாட்டில் ஆண்டுதோறும் அதிபரை அந்த நாட்டின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கும். இந்த நிலையில் அடுத்த ஓராண்டு காலத்துக்கு அதிபராக அந்த நாட்டின் நிதி மந்திரியாக இருந்து வரும் உய்லி மவுரர், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இவர் வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

இவர் 7 உறுப்பினர்களைக் கொண்ட பெடரல் கவுன்சிலுக்கு (மந்திரிசபை) தலைமை தாங்குவார். அதே நேரத்தில் அவருக்கென்று சிறப்பு அதிகாரம் எதுவும் கிடையாது. மந்திரிகளுக்கு உள்ள அதிகாரம்தான் அவருக்கும் வழங்கப்படுகிறது.

 மேலும் அந்த நாட்டின் எரிசக்தி துறை மந்திரியாக வயோலா அம்ஹெர்டும், பொருளாதார துறை மந்திரியாக கரின் கெல்லரர் சுட்டரும் தேர்வு செய்யப்பட்டனர்.