உலக செய்திகள்

வேற்றுகிரக வாசிகள் ஏற்கனவே பூமிக்கு வந்து விட்டார்கள் : நாசா விஞ்ஞானி அதிர்ச்சி தகவல் + "||" + Aliens ’may have ALREADY visited Earth’ – NASA scientist

வேற்றுகிரக வாசிகள் ஏற்கனவே பூமிக்கு வந்து விட்டார்கள் : நாசா விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்

வேற்றுகிரக வாசிகள் ஏற்கனவே பூமிக்கு வந்து விட்டார்கள் : நாசா விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்
வேற்றுகிரக வாசிகள் ஏற்கனவே பூமிக்கு வந்து விட்டார்கள். அதிர்ச்சியூட்டும் வேறுபட்ட தோற்றத்தால் வேற்றுகிரக வாசிகளை நாம் அறியாமல் இருக்கலாம் என நாசா விஞ்ஞானி கூறி உள்ளார்.
340 கோடி ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் முதன்முதலாக இந்தப் பூமியில் உயிரினங்கள் உருவானதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.  அப்போது முதலில் உருவான உயிரினம் எது என்றால் ஆஸ்திரேலியா கண்டத்தில் உருவான ‘ஸ்டி ரோமடோலிட்ஸ்’ என்ற பாக்டீரியாதான் என்று கை நீட்டுகிறார்கள், விஞ்ஞானிகள். இப்படி எத்தனையோ சுவாரசியங்கள், நம்மைச் சுற்றிலும் புதைந்து கிடக்கின்றன பிரபஞ்ச ரகசியங்களாக.

வேற்றுகிரக வாசிகள் பறக்கும் தட்டின் மூலமாக பூமிக்கு வந்து சென்றார்கள் என்ற தகவல் அவ்வப்போது வெளிவந்தது உண்டு. விஞ்ஞானத்தில் முன்னணியில் உள்ள அமெரிக்காவையும் கூட இந்த வேற்றுகிரக வாசிகள் மோகம் விட்டுவைக்க வில்லை. அதனால்தான் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ இன்னும் இதுபற்றிய ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா? இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. வேற்றுகிரக வாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது  விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்துள்ளனர்.

அதிர்ச்சியூட்டும் வேறுபட்ட தோற்றத்தால் மக்கள் வேற்றுகிரக வாசிகளை அறியாமல் இருக்கலாம் என நாசா விஞ்ஞானி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

நாசா ஆம்ஸ் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த கணினி நிபுணர் சில்வானோ பி கொலம்பானோ, தான் வெளியிட்டு உள்ள தி சைஸ் ஆப் எக்ஸ்ப்ளோரர் என்ற ஆராய்ச்சி கட்டுரையில் கூறி இருப்பதாவது:-
 
வேற்றுகிரக வாசிகள் பூமியில் தரையிறங்கியிருக்க முடியும்.  அவர்கள் தங்களை கண்டறியப்பட கூடாது என்பதில்  மிகவும் கடுமையாக இருக்கிறார்கள். அவர்கள் மிகச்சிறிய அறிவார்ந்தவர்களாக இருக்கலாம்.  நிபுணர்கள், வேற்றுகிரக வாசிகள் விண்மீன் கூட்டத்தில் இருக்கிறார்களா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மனித நாகரீகம் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஆனால் கடந்த 500 ஆண்டுகளில் தான்  விஞ்ஞான முறைகளின் வளர்ச்சியை கண்டிருக்கிறது.

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்  உருவானது போல் ஒரு தொழில்நுட்ப-உயர்ந்த இனம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்வதில் கணிசமான கஷ்டங்கள் மனிதகுலத்திற்கு இருக்கலாம்.

டாக்டர் மேகீ அடிடின்-போக்காக்,  வேற்றுகிரக வாசிகள் பொதுவாக கற்பனை செய்யப்படுவதற்கு முற்றிலும் மாறுபட்டதாக  இருக்கலாம் என கூறி உள்ளார்.

வேற்றுகிரக வாசிகள் நீர் சார்ந்த உயிரினங்கள் போல் உலோகத் தோல் கொண்டிருக்கலாம் என நம்புகிறார்.

ஏற்கனவே சதித்திட்ட கோட்பாட்டாளர்கள் வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு பயணித்திருக்கிறார்கள் என்று நம்புகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. விண்வெளியில் குழந்தை பெற்றுக்கொள்வது சாத்தியமா ஆராய்ச்சியில் -ஸ்பேஸ் லைப் நிறுவனம்
விண்வெளியில் பிரசவம் நடந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வியை முன்னிறுத்தி, அதைச் சாத்தியமாக்குவதற்கான வேலையிலும் இறங்கியிருக்கிறது ஒரு நிறுவனம்.
2. சூரிய கிரகத்திற்கு மிக நெருக்கமாக சென்ற நாசாவின் பார்கர் சோலார் புரோப்
சூரிய கிரகத்திற்கு மிக நெருக்கமாக சென்று நாசாவின் பார்கர் சோலார் புரோப் சாதனை புரிந்து உள்ளது.
3. விண்கல்லை ஆராய அனுப்பட்ட ரோவர் புகைப்படம் எடுத்து அனுப்பியது
ஜப்பானின் ஹயமியூசா-2 விண்கலம் ரயூகு விண்கல்லை ஆராய அனுப்பட்ட ரோவர் புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது.
4. வியாழன் கிரகத்தில் பூமியை விட 5 மடங்கு அதிக தண்ணீர் நாசா தகவல்
பூமியை விட அதிக அளவு தண்ணீர் வியாழன் கிரகத்தில் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் குழு தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
5. நெறிமுறைகளை தாண்டி மேற்கொள்ளப்பட்ட வேற்றுக்கிரக மம்மியின் ஆய்வு
நெறிமுறைகளை தாண்டி மேற்கொள்ளப்பட்ட வேற்றுக்கிரக மம்மியின் ஆய்வில் விஞ்ஞானிகள் தற்போது நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.