உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 10 Dec 2018 10:30 PM GMT (Updated: 10 Dec 2018 9:20 PM GMT)

லிபியாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் புக்கா நகரில் இருந்து 10 பேரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.

* இஸ்ரேலில் சர்ச்சைக்குரிய மேற்குகரை பகுதியில் உள்ள ஒரு முகாமுக்கு அருகே நின்று கொண்டிருந்த இஸ்ரேலியர்களை, காரில் வந்த பாலஸ்தீனர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இஸ்ரேலியர்கள் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சூயோங் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிர் இழந்தனர். பலத்த காயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.

* லிபியாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் புக்கா நகரில் இருந்து 10 பேரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். அவர்களில் 6 பேரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலை செய்துவிட்டனர்.

* ஆப்கானிஸ்தானில் கந்தாகார் மாகாணத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ ஹெலிகாப்டர் டாமன் மாவட்டத்தில் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது. இதில் ராணுவ வீரர்கள் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரும், மனித உரிமை ஆர்வலருமான நாடியா முராட் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான விசாரணையை தொடங்குவதற்கு சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

* ஜெர்மனியில் ரெயில்வே தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு நேற்று 4 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.


Next Story